ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் – யாழ். பிரதேச செயலர்!

ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் அனைத்தும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண பிரதேச செயலர் பொ.தயானந்தன் தெரிவித்துள்ளார்.
பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் யாழ்ப்பாண பிரதேச பிரிவுச் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூன்றில் ஒரு பகுதியினரே ஓய்வூதியம் பெறுகின்றார்கள். வயோதிப காலத்தில் இந்த ஓய்வூதியம் பெரும் உதவியாக இருக்கும். ஓய்வூதியம் பெறுபவர்கள் சமூகத்துக்கு பல தரப்பட்ட நன்மைகளை செய்வதற்கு முன்வர வேண்டும். சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைய வேண்டும்.
மேலும் ஓய்வூதியர்கள் தேவை நிமித்தம் கடன்களை பெற்றால் எந்த நோக்கத்துக்கு கடனை பெற்றார்களோ அதை சிறப்பாக மேற்கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அதைவிடுத்து வேறு தேவைகளுக்கு அப் பணத்தை பயன்படுத்தி விட்டு மீண்டும் கடனாளிகள் ஆகக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|