ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கைகள்!

இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிற்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான வேலைத்திட்டம் மற்றும் அவர்கள் தொடர்பான இதர நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இதன்போது இந்த திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்துவற்கான ஆலோசனைகளை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.ஏபிஜி. கித்சிறி ,இலங்கை ஒய்வுபெற்ற இராணுவ சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் (ஓய்வு பெற்ற) கே.ஏ.ஞானவீர, இராணுவ சங்க உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
|
|