ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி !

Tuesday, April 4th, 2017

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக வரும் புதன்கிழமை (05) நீதியமைச்சில் வைத்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நூறுபேருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்படவுள்ளது.

பொதுமக்களுக்குப் பயனுள்ள சேவைகளை ஆற்றும் வகையில் ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடுக்கும் நோக்கில் இவ்வாறான சமாதான நீதவான் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக நீதியமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: