ஓய்வுபெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த திட்டம் – கல்வி அமைச்சர்!

Tuesday, February 12th, 2019

ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை மீளவும் பணியில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஆசிரிய பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்களை பணியில் இணைத்துக்கொள்ளும் வகையிலான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.