ஓட்டோ, மோட்டார் சைக்கிள் லீசிங் தொகை குறைப்பு!
Saturday, November 19th, 2016இம்முறை வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையின்படி ஓட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களுக்கும் இதுவரை வழங்கப்பட்டு வந்த குத்தகை வசதி குறைக்கப்பட்டிருப்பதாக குத்தகை நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன் பிரகாரம் ஓட்டோக்களுக்கான குத்தகை வசதி 70 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரையிலும், மோட்டார் சைக்கிள்களுக்கான வசதி 70 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை நடைமுறையில் இருந்த குத்தகை வசதிகளின் கீழ் ஓட்டோவொன்றைக் கொள்வனவு செய்ய விரும்புவர் அதன் மொத்தப் பெறுமதியில் 30 சதவீதத்தை முதலில் செலுத்தி எஞ்சிய 70 வீதத்தை தவணை முறையில் செலுத்த முடிந்தது. எனினும், புதிய சட்டத்தின்படி அந்த ஓட்டோவின் பெறுமானத்தில் 75 வீதத்தை முதலில் செலுத்தி எஞ்சிய 25 சதவீதத்தை மாத்திரமே தவணை முறையில் செலுத்தலாம். அவ்வாறே மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு முதலில் அதன் பெறுமதியில் 50 சதவீதத்தைச் செலுத்தி எஞ்சிய 50 சதவீதத்தையே தவணை முறையில் செலுத்த முடியும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
புற்றுநோய்க்காக நிதியுதவி கோரியுள்ள மஹேல!
06 கைதிகள் தப்பியோட்டம்!
மூளைக் காய்ச்சல் - யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் பலி!
|
|
டொலர் நெருக்கடிக்கு தீர்வாக டிசம்பர் வரை சந்தைகளுக்கு புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது – ...
ஜனாதிபதி ரணிலின் தலைமையில் இலங்கை விரைவில் மீண்டெழும் - இலங்கை வந்துள்ள பான் கீ மூன் நம்பிக்கை தெரிவ...
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...