ஒலி பெருக்கியை கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு அபராதம்

Sunday, April 10th, 2016

ஆட்டோவொன்றில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை ஆகக் கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார்.

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில் மேற்குறிப்பிட்ட ஆட்டோ சாரதி 08.04.2016ல் ஆஜர் செய்ததும் நீதிபதி ஆட்டோ சாரதியை கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

பதுளை பகுதியின் தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவரின் ஆட்டோவில் தேவைக்கு அதிகமாக அலங்காரங்களை ஏற்படுத்தி, அதில் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியை இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஒலி பெருக்கியை அதிக இரைச்சலுடன் ஒலித்தமையினால், ஆட்டோவில் பயணிக்கின்றவர்களும், பாதையில் நடமாடும் பொதுமக்களும் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கியமை தொடர்பாகவே ஆட்டோ சாரதி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: