ஒலிம்பிக் வைத்திய குழுவில் இருவர் இலங்கை வைத்தியர்கள்!
Tuesday, July 26th, 2016ஒலிம்பிக் தொடருக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கராபிடிய போதனா வைத்தியசாலையின் விளையாட்டு வைத்தியப் பிரிவின் பிரதானி வைத்தியர் ஹிமான் டி சில்வா மற்றும் வைத்தியர் சங்க தேபுவனஆராச்சி ஆகியோரே இவ்வாறு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் தேவையான விமான டிக்கெட்டுக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மேலும், குறித்த இரு வைத்தியர்களும் இன்று பிரேசில் நோக்கி பயணிக்கவுள்ளனர். எதிர்வரும் 5ம் திகதி பிரேசிலில் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் 150 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|