ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் ஏ.ஆர்.ரகுமான்.!

Sunday, May 15th, 2016

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்க இருக்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடும் வீரர் அபினவ் பிந்த்ரா, சல்மான் கான், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஏற்கனவே நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு நாடு முழுவதும் நல்ல மதிப்பு இருப்பதால், ஒலிம்பிக் அணியை பிரபலப்படுத்த அவர் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Related posts: