ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலை வேண்டாம் – மன்னார் கத்தோலிக்க ஒன்றியம்

Wednesday, July 12th, 2017

மன்னார் மறை மாவட்டத்தில் இன மத ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் சில சூத்திரதாரிகளின் திட்டமிடப்பட்ட செயலுக்காக அப்பாவி மக்களை குழப்பி குளிர்காய்ந்து அரசியல் இலாபம் தேடும் எட்டப்பன் வேலைகளை கைவிட்டு விடுங்கள் என மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ப.அன்ரன் புனிதநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் மறைமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் கத்தோலிக்க மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திஇ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் சின்ன கருசல் கப்பலேந்தி மாதா கத்தோலிக்க ஆலயத்திற்கு சொந்தமான காணிக்கான பாதுகாப்பு வேலிகள் பெரிய கரிசல் கிராம முஸ்லிம்களால் அண்மையில் உடைத்து சேதமாக்கப்பட்டன. அத்தோடு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நடைபெற்ற போது ஆலயம் மீது கற்களை எறிந்து திருப்பலி வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை குழப்பியும் ஆலய காணி பிணக்கு தொடர்பான வழக்கினை தாக்கல் செய்தவரின் வீட்டிற்கு தீ வைத்தும் அட்டகாசம் செய்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள புனித மிக்கல் சம்மனசானவரின் திருச்சொரூபம் மற்றும் முருங்கன்இ இசைமாலைத்தாழ்வு பங்கில் அமைந்துள்ள புனித அந்தோனியாரின் திருச்சொரூபம் ஆகியனவும் உடைத்து சேதமாக்கப்பட்டன.

இச் செயற்பாடானது இன ஒற்றுமையை சிதைக்கும் நடவடிக்கையென குறிப்பிட்டுள்ள மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றிய தலைவர் கத்தோலிக்க மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் இடையில் பிரிவினைகளையும் குழப்பத்தினையும் கலவரத்தினையும் ஏற்படுத்த சில விசமிகள் முனைவாகவே இச் செயற்பாடுகள் அமைந்துள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில்இ வன்முறையை கையில் எடுக்காமல் நாவடக்கத்தை கடைப்பிடித்து மக்கள் செயற்பட வேண்டும் எனவும் இச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: