ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவது எளிதான காரியம் அல்ல – பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!

சில தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இது நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்று தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், ஒரு நாட்டில் அனைத்து நடவடிக்கைகளை முடக்குவது என்பது எளிதான காரியம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் முற்றிலும் அவசியமானதாகக் கருதப்பட்டால், ஒரு முக்கியமான கட்டத்தில் மட்டுமே நாடு முழுமையாக முடக்கப்படும் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை அபிவிருத்தி செய்து, முன்னோக்கி கொண்டு செல்லவார் என்கின்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|