ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிப்பு!

Friday, September 9th, 2016

 

2003 ஆம் ஆண்டு டயகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்காக நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2003.08.06 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கொலை சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அக்கரைப்பத்தனையிலிருந்து 10 கி.மீ தூரத்திலிருக்கும் டயகமவில் ஆறு பிள்ளைகளின் தந்தையான சந்தனம் மைக்கல் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மரணமடைந்தவரின் மனைவியான திருமாள் ராஜேஸ்வரி வழங்கிய சாட்சியின் அடிப்படையிலேயே குறித்த மூவருக்கும் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெருமாள் மகாலிங்கம் (60), பாலகிருஷ்ணன் சுகனேஸ்வரன் ( 32), மகாலிங்கம் சிவனேஸ்வரன் (வயது 37) ஆகியோருக்கே நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

 death_fanlty


பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி  பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்த யாழில் உதயமாகிறது பண்பாட்டு மறு...
மின்வெட்டுதொடர்பான நேர அட்டவணை வெளியானது !
நாட்டில் 23,000 கணித,விஞ்ஞான,ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்...
புற்றுநோயாளர்களுக்கு எலும்பு மச்சை பொருத்தும் சத்திர சிகிச்சை!
இராணுவத்தில் இருந்து   தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!