ஒய்வு பெற்ற இராணுவம் மற்றும் பொலிஸார் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Monday, July 25th, 2016கொழும்பில் ஒய்வு பெற்ற மற்றும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் மேற்கொள்ளும் போராட்டத்தினால் கொழும்பு லோட்டஸ் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒய்வு பெற்ற மற்றும் விசேட தேவையுடைய இராணுவ வீர்ர்கள் மற்றும் பொலிஸார் கொழும்பு புறக்கோட்டையில் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கான ஒய்வூதியம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராகவே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
இதனைத் தொடர்ந்து மனு ஒன்றை கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் வரை ஒய்வு பெற்ற மற்றும் விசேட தேவையுடைய இராணுவ வீர்ர்கள் மற்றும் பொலிஸார் பேரணியாக செல்வதனால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
Related posts:
உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் அனுமதியின்றி நடைபாதை வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகளுக்...
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது - பூசகர...
|
|