ஒப்பந்தங்கள் அடிப்படையில் நியமனம் : போக்குவரத்து சபை ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Monday, February 20th, 2017

எதிர் வரும் காலங்களில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணியாளர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்களின் அடிப்படையில் நியமிக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கும் நிலைவரும் என இலங்கை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்விடயம் பணியாளர்களின் திறன் மற்றும் தொழில் முறைமையை மாற்றியமைக்கும் என தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒப்பந்தங்கள் அடிப்படையில் நியமிப்பது தொடர்பிலான விடயங்கள் தனியார் தொழிற்துறை சார்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்படுவதனால் தமக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1913747584Untitled-1

Related posts: