ஒன்பது கிலோ கஞ்சாவுடன் கைதான யுவதிக்கு விளக்கமறியல் !

Friday, November 25th, 2016

யாழ். மாதகல் பகுதியில் ஒன்பது கிலோக் கிராம் கஞ்சா மற்றும் 76 இலட்சம் ரூபா பணத்துடன் கைதான யுவதியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ரீ.கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.

மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றின் அறையில் குழி வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த ஒன்பது கிலோ கஞ்சா மற்றும் 76 இலட்சம் ரூபா பணம் ஆகியவற்றை இளவாலைப் பொலிஸார் கடந்த-16 ஆம் திகதி மீட்டதுடன், சந்தகநபரான யுவதியையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். குறிப்பிட்ட யுவதியைப் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரைக் கடந்த- 21 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.  இதன் போது யுவதியை நேற்று வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட ப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

remand c 4856

Related posts: