ஒட்டுகேட்டிருந்தால் உடன் விசாரணை – அமைச்சர் சாகல ரட்னாயக்க!
Friday, October 7th, 2016
ஒட்டுக்கேட்டல் தொடர்பில் யாராவது முறைப்பாடு செய்தால் சுயாதீனமான பொலிஸ் விசாரணையொன்றை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக சட்டம், ஒழுங்கு, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை பொலிஸ் அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் நீதிபதிகளது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாகவும், ஈமெயில் கணக்குகளுக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வருவதாகவும் குற்றச்சாட்டு சுமத்தும் விதத்தில் பல ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இக்குற்றச்சாட்டு சுமத்தும் தரப்பினர் இது தொடர்பில் ஒழுங்கான முறைப்பாட்டை செய்வார்களானால் அது தொடர்பில் ஒழுங்கான, சுயாதீனமான விசாரணையை பொலிஸாரால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றேன். அதேபோன்று இந்த நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். எந்தவொரு வகையிலும் நீதித் துறையின் சுயாதீனத்துக்கோ, நம்பகத்தன்மைக்கோ அபகீர்த்தி ஏற்படுத்துவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Related posts:
|
|