ஐ.நா. சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்!

Sunday, September 18th, 2016

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரைநிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு நாளை தொடக்கம் 26 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இம்முறை அமர்வு மூன்று பிரதான காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜக்கிய நாடுகள் சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான மாநாடு அவற்றுள் ஒன்றாகும்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவென்பதுடன், 10 வருடங்களாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட பேன் கீ மூன் இம்முறை பொதுச் சபை அமர்வில் தனது இறுதி உரையை ஆற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

sri-lanka-president-maithripala-sirisena-meets-un-chief-ban-ki-moon

Related posts: