ஐ.நாவில் பல நாடுகள் ஆதரவு கிடைக்கும் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை!

ஐ.நா. தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகியதால் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு இம்முறை பல நாடுகள் ஆதரவு வழங்க காத்திருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்..
ஜெனிவாத் தொடர் மற்றும் புதிய அரசமைப்பு ஆகியன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
கடந்த ஆட்சியின் போது அரசமைப்பு ஊடாக நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு முயற்சி எடுத்த போது அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். ஒற்றையாட்சி மற்றும் ஒருமித்த நாடு ஆகிய இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கவும். அவ்வாறு இல்லையேல் அது பிரிவினைவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
ஒற்றையாட்சி என்பது நாட்டில் எல்லா பகுதிகளிலும் ஒரு சட்டம் அமுலில் இருப்பது. இங்கு 18 வயதில் திருமணம் முடிக்கக் கூடியதாக இருந்தால் அதே நிலை தான் யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும். அங்கு 15 வயதில் திருமணம் முடிக்க முடியாது. ஆனால், ஒருமித்த நாடெனில் 9 மாகாணங்களில் பல சட்டங்கள் இருக்கும். அதுவே சமஷ்டிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|