ஐ.தே.கட்சியுடன் இணைகிறார் திஸ்ஸ!

Monday, August 28th, 2017

எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படப்போவதாக, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

தாம் அரசியல் செயற்பாடுகளில் இருந்து சில நாட்கள் விலகியிருந்ததாக தெரிவித்த அவர், மீண்டும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்அதற்கான காலம் தற்போது நெருங்கியுள்ளதுஎனவே எதிர்வரும் பொது தேர்தலில் அதற்கான காலம் கனியும். தற்போது தாம் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிப்பதையே மக்களும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியுடன் எதிர்வரும் பொது தேர்தலில் இணைந்து அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

Related posts: