ஏழு பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Thursday, August 4th, 2016
சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, இந்திய பிரஜைகள் ஏழுபேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பிலான விசாரணை நேற்று(03) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுநீரக சத்திரசிகிச்சை இடம்பெற்றதாக கூறப்படும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுநீரக சத்திரசிகிச்சைகளின் அறிக்கையை பெற்றுத்தருமாறு நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர்.குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் பொலிஸார் கோரும் அறிக்கையை ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related posts:
|
|