ஏற்றுமதி நோக்கில் எள்ளு பயிரிட அரசு விசேட திட்டம்!

Saturday, June 30th, 2018

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்தாண்டு மாத்தளை மாவட்டத்தில் 500 ஹெக்டேயர் காணியில் எள்ளு பயிரிட மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அந்தவகையில் தம்புள்ளை, கலேவெல, லக்கல ஆகிய பகுதிகளில் இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளமும் நிலமும் காணப்படுவதனால் இத்துறையில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் விவசாய நடவடிக்கையில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். உற்பத்தியாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயன்தரக் கூடிய விதைகளும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: