ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு!

Tuesday, March 13th, 2018

இந்த வருடத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இம்முறை வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான பதினாறாயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக அடைய முடியும் என்று சபையின் தலைவர்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: