எவ்வித அச்சமும் இல்லை – கபீர் ஹசீம்!

Thursday, June 6th, 2019

அமைச்சுப் பதவியில் இருந்து விலகியது எவரையும் பாதுகாப்பதற்காக இல்லை என முன்னாள் அமைச்சர் கபீர் ஹசீம் பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தான் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவது தொடர்பில் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.