எழுதுமட்டுவாளில் விடுமுறை இல்லம் யாழ்.மறைமாவட்ட ஆயரால் திறந்து வைப்பு!

Thursday, June 3rd, 2021

எழுதுமட்டுவாள் பிரதேசத்தில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான “நுங்குவில் தோட்டத்தில்”  புதிதாக  அமைக்கப்பட்ட ‘விடுமுறை இல்லம்’ யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது

யாழ் மவட்ட ஆயரால் விடுமுறை இல்லம் ஆசீர்வதிக்கப்பட்டு நாடா வெட்டி    திறந்துவைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வை நினைவு கூரும் முகமாக யாழ் ஆயரினால்  மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையின்   காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ மதகுருமார்களின் பங்கு பற்றுதலோடு குறித்த திறப்பு விழா இனிதே நிறைவு பெற்றது.

Related posts: