எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் கைது!

Wednesday, August 9th, 2017

வடபகுதிக் கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு தாக்குதல் வள்ளத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கையின் போது இலங்கைக்கு உட்பட்ட கடற் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 49 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 12 டோலர் வள்ளங்களும் கைதுசெய்யப்பட்டுள்ளன.

நெடுந்தீவின் வடமேற்கு கடல்பகுதியில் 2 இந்திய டோலர் வள்ளங்களும், கோவிலன் துறை கடற்பகுதியில் 10 டோலர் வள்ளங்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட பண்ணை முறையிலான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதாவது பொட்டம் றோலிங் (bottom trawling ) முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது கடல் வளங்களை அழிக்கும் மீன்பிடிமுறையாகும்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கப்பல் பிரிவிற்கு அழைத்துவரப்பட்டதுடன் வள்ளங்களும் ஒப்படைக்கப்பட்டன. மற்றும் வள்ளங்கள் இதன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்

Related posts: