எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதியில்லை !

Tuesday, January 8th, 2019

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சமையல் எரிவாயு நிறுவனங்கள் தொடர்ந்தும் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சகல சந்தர்ப்பங்களில் அவ்வாறான அதிகரிப்பு மேற்கொள்ளப்படாது.

அது தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டே, பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.