எரிபொருள் விநியோகத்துக்கான QR பதிவு மீண்டும் ஆரம்பம் – ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Monday, August 8th, 2022

தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் புதிய பதிவுகளுக்காக இந்த அமைப்பு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே தேசிய எரிபொருள் அனுமதி பத்திர கியூ.ஆர் முறைமை மீண்டும் புதிய பதிவுகளுக்காக திறக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

புதிய பதிவுகள் 48 மணித்தியாலங்களுக்கு முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

டுவிட்டரில் ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்ட ICTA, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக பதிவு செயல்முறை முடக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

எவ்வாறாயினும், தற்பொழுது திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி பத்திர வலைதளம் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது கோட்டாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை  நள்ளிரவுமுதல் ஆரம்பிக்கப்பட்டது என   எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

மேலும் QR  முறமை  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நள்ளிரவில் புதுப்பிக்கப்படும் எனவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.

இதன்படி, கடந்த வாரம் எரிபொருள் வழங்கப்பட்டதை போன்று மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும்  ரிபொருள் வழங்கப்படும்.

இதேவேளை  போதியளவு எரிபொருள் இருப்பதனால் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறித்தியுள்ளார்

இந்நிலையில் இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: