எரிபொருள் தொடருந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

எரிபொருளை கொண்டுசெல்லும் தொடரூந்து சாரதிகள் நேற்றைய தினம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பவதாக தெரியவருகின்றது.
கொலன்னாவை மற்றும் ஒருகொடவத்தை முதலான பகுதிகளுக்கு இடையில் பயணிக்கும் எரிபொருளை கொண்டுசெல்லும் தொடரூந்தை நிறுத்தி, அதன் சாரதி மீதும், உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் காயமடைந்த தொடருந்து சாரதி, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை கைது செய்யும் வரையில் போராட்டத்தை முன்னெடுப்பதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்காலத்தில் தொடருந்துகளை செலுத்தும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.
Related posts:
|
|