எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!
Saturday, December 3rd, 2016நாட்டில் இன்று பிடல் காஸ்ட்ரோக்கள் உருவாகவில்லை. மாறாக “பரிஸ்டாக்களே” உருவாகின்றனர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையில் முதன் முதலாக காஸ்ட்ரோவை நினைவுகூர்வது அவருக்கு வழங்கும் உயரிய கெளரவமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
“நினைவு கூரலுக்கான அழைப்பு” என்ற தொனிப்பொருளில் மறைந்த முன்னாள் கியூபத் தலைவர் பிடல் கஸ்ட்ரோவின் ஞாபகார்த்த நினைவு தினம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
“கியூபாவின் புரட்சிப்புயல், யுகப்புருஷர் பிடல் கஸ்ட்ரோ. கியூபப் புரட்சி மூலம் உலகம் அரசியலைப் பயில வேண்டும்.அங்கு சம அந்தஸ்து ஜனநாயக சுதந்திரத்தை பெற்றுக்கொடுப்பற்காக தனது இறுதி மூச்சுவரை பாடுபட்டார். இறுதி வரை போராடினார்.
உலகில் இன்று கஸ்ட்ரோக்கள் உருவாகவில்லை. மாறாக பரிஸ்டாக்களே உருவாகின்றனர். லெனின்கள் உருவாகவில்லை. லெனினின் கொள்கைக்கு எதிரானவர்களே தலைதூக்குகின்றனர்.
கஸ்ட்ரோவின் சுயசரிதை நமக்கு நல்லொரு பாடமாகும். எமது அரசியல்வாதிகள் இதிலிருந்து பாடம் பயில வேண்டும்.அந்த நாட்டில் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தினார். நீண்ட காலமாக அரசியல் புரட்சியை மேற்கொண்ட நல்ல பல பாடங்களை உலகிற்கு காண்பித்தார்.
எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்காகவே எனது அரசியல் குருவாவார். அந்த குருவானவரே கியூபப் புரட்சி ஏற்பட்டு 48 மணித்தியா லங்களுக்கு பிடல் கஸ்ட்ரோவை கியூபத் தலைவராக ஏற்றுக்கொண்டார்.
அவ்வாறான சிறப்பான அரசியல் பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். இதுவரை காலமும் மறைந்த உலகத் தலைவர்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடத்தப்பட்டில்லை.இவ்வாறானொரு நிலைமையிலேயே பிடல் கஸ்ட்ரோவின் நினைவு தினத்தை ஞாபகார்த்த நிகழ்வை ஜனாதிபதி மாளிகையில் நடத்த தீர்மானித்தேன்.
ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வை நடத்துவதன் மூலம் காஸ்ட்ரோவுக்கு உயரிய கெளரவத்தை வழங்கியுள்ளேன்.முதல் முறையாக இவ்வாறான ஒரு நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெறுகின்றது என்றார்.
Related posts:
|
|