எமக்கு பதவி வேண்டும் -கூட்டு எதிர்கட்சி!

Monday, January 16th, 2017

இலங்கை நாடாளுமன்றத்தின் அனைத்து எதிர்கட்சி பதவிகளும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும்  அதன்படி எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சிகளின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் கூட்டு எதிர்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை கொண்டுள்ள கூட்டு எதிர்கட்சிக்கு குறித்த இரண்டு பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜே.வி.பிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மொத்தமாக 22 உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு வழங்குவதாகவும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அவர்களை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது தரப்பு கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எதிர்கட்சியை தலைமை தாங்குவதற்கு தாம் விரும்புவோரை நியமித்து, தமது செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

எதிர்கட்சி அமைப்பாளர்களையும் தாம் விரும்பியவாறு அரசாங்கம் நியமித்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டவர்களே எதிர்கட்சி தலைவர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன, இரா.சம்பந்தனை எதிர்கட்சித் தலைவராக நியமித்தமைக்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

dinesh-gunawarththana-01-01-2015-720x480-720x480-720x480

Related posts: