எமக்கு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை !

Monday, July 11th, 2016

“அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்னும் வேலைத்திட்டம் இதுவரை 7000பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக அடையாளங் காணப்பட்டுள்ள பாடசாலைகளை சிறந்த பாடசாலையாக மீண்டும் வடிவமைத்தல், நகர் புறங்களில் உள்ள பாடசாலைகளின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், அனைவருக்கும் சமகல்வி பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த செயல் திட்டத்திற்காக 6400 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியனில் இருந்து 400 மில்லியன் ரூாப வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் பாடசாலைகளில் நீர், மீன்சாரம், சுகாதார வசதிகள் வழங்கப்படவுள்ளதோடு, பாடசாலை உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள், மனித வள மேம்பாடுகள் என்பன பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

Related posts: