எப்.சி.ஜ.டி விசாரணைக்கு எதிர்ப்பு!

Monday, January 23rd, 2017

நாடாளுமன்ற கோப் குழுவினால் நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு விசாரணை நடத்துவதை ஜக்கிய தேசியக் கட்சியின் பிக்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி கோப் குழு நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையின் படி 19 அரச நிறுவனங்கள் மீது நிதிமுறைக்கடு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்த வேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். மேலும் விசாரணைகள் மத்திய வங்கியின் முறிகள் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளை போன்று நடத்தப்பட வேண்டும் என்று நடடாளுமன்ற உறுப்பினரான ஹர்சன ராஜகருண நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

cope

 

Related posts: