என்னை யாராலும் கட்டப்படுத்த முடியாது – ரஞ்சன் ராமநாயக்க!

தனது வாயை எவராலும் அடைக்க முடியாது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கள்வர்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபடுவோர், கொலைகாரர்கள் மற்றும் மதுபான விற்பனையாளர்களை அம்பலப்படுத்துவதற்கு நான் எடுக்கும் முயற்சியை எவராலும் தடுக்க முயாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியும் பாதுகாக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டால் அது இந்த அரசாங்கத்தினதும் கடந்த அரசாங்கத்தினதும் கள்வர்களையே பாதிக்கும். மக்களுக்காக குரல் கொடுப்பதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்!
18 இராணுவ அதிகாரிகள் ஐரோப்பா பயணங்களை மேற்கொள்ள முடியாது!
யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனை: பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் தொற்று இல்லை!
|
|