எதிர்வரும் 27 ஆம் திகதி 8வது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!
Tuesday, January 10th, 2017
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை மற்றும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநாகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது என கண்காட்சி இணைப்பு தலைவர் கே. பூரணசந்திரன் எமக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாட்டு சேவைகள் நிறுவனம் , யாழ் கைத்தொழில் வர்த்தக பேரவையுடன் இணைந்து இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக கண்காட்சி இணைப்பு தலைவரும் முன்னாள் யாழ் வர்த்தக கைத்தொழில் பேரவையின் தலைவருமான கே. பூரணசந்திரன் எமக்கு தெரிவித்தார்.
இந்த மாபெரும் கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை 8வது முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தையில் சிங்கப்பூர் இந்தியா மலேசியா சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் உள்ளிட்ட 350க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் 300க்கும் மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டட தொழிற்துறை மருத்துவ தொழிற்துறை உணவு குளிர்பானங்கள்; பொதியிடல் தொழி;ல் துறை வாகன தொழில் துறை தகவல் தொழில்நுட்ப துறை நிதிசேவைகள் ஆடைத்தொழிற்துறை மற்றும் விவசாயம் பாவனையாளர்களுக்கான பொருட்கள் உள்ளிட்டவை இந்த 3 நாள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
இசை நிகழ்ச்சிகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான வீதி நாடகங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த முறை நடைபெற்ற இந்த கண்காட்சியின் போது சுமார் 6000 பேர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
மணித்தியாலத்திற்கு அதிஸ்ட சீட்டிழுப்பும் ,சுகாதாரம் தொடர்பிலான இலவச பரிசோதனைகளும் சிகையலங்காரம் தொடர்பான ஆலோசனை அமர்வுகளும் இதில் இடம்பெறவுள்ளது. உயர்கல்விக்கான புலமைப்பரிசில் தொடர்பான விடயங்களும் உயர்கல்விக்கான அதிஷ்ட சீட்டுழுப்புக்களும் இதில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|