எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுகினறது நடமாட்டத் தடை – மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நடைமுறைக’கு வரும் என இராணுவத் தளபதி அறிவிப்பு!

தற்போது நாடுமுழுவதும் நடைமுறையிலுள்ள நடமாட்டக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 23 ஆம் திகதி இரவு 10 மணி வரையில் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 வரையில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.. அத்துடன் தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|