எதிர்வரும் 14 முதல் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்!

Monday, February 11th, 2019

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வாரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நுளம்புக் கட்டுப்பாட்டுச் செயற்றிட்டங்கள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையில் கொழும்பு மாவட்டத்துக்கு அடுத்ததாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாதாந்தம் ஆயிரத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்ப்பாணத்தில் தீவிர சோதனைகள் இடம்பெறவுள்ளன. குடாநாடு முழுவதும் சுகாதாரப் பிரிவினர் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர்.

யாழ். மாநகரப் பிரதேசத்தில் 14 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். நகரில் ஜே.74, 78 ஆகிய கிராம அலுவலர் பிரிவிலும் மறுநாள் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாவாந்துறையில் ஜே.87 வண்ணார்பண்ணையில் ஜே.101 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலும் இந்த தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெறுமென மாநகர சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.


மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய 4 மாதம் அவகாசம்!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலுள்ள அயலுறவுச் செயலகத்தில் சுமார் 100 விண்ணப்பங்கள் ஒருவார காலத்திற்குள...
மீன் விலையில் வீழ்ச்சி!
தப்பியோடிய இராணுவத்தினரே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் - இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை!
குடாநாட்டில் உருளைக் கிழங்கு செய்கைக்கு தயாராகும் விவசாயிகள்!