எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்!

Friday, October 28th, 2016

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக ‘கியான்ட்’ புயல் நாட்டின் வடகிழக்கு திசையில் சுமார் 700 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இதனால் நாட்டிற்கு எந்த நேரடித் தாக்கமும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற்பகல் 2.00 மணியின் பின்னர் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்பார்க்க முடியும்.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

0e475bcf85b44d4bceefcae09d3a1cf2_L

Related posts: