எதிர்காலத்தில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் – நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்!

Friday, September 30th, 2016

எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என நகர திட்டமிடல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நீர் கட்டணம் சீர்த்திருத்தப்படும். நான்கு வருடங்களாக நீர் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

தேர்தல் காலத்தில் கடந்த அரசாங்கத்தினால் நீர் கட்டணம் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.வரட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

water-board

Related posts: