எதிர்காலத்தில் ஈ.பி.டி.பியின் கரங்களை பலப்படுத்துவோம் – கல்லுடைக்கும் தொழிலாளர்கள்

Monday, April 10th, 2017

கல்லுடைக்கும் தமது உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றில் குரல் கொடுத்தமைக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் சார்பில் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் குறித்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச அலுவலகத்தில் இன்றைய தினம் (10) வருகை தந்திருந்த உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கட்சியின் பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரனை சந்தித்து கலந்துரையாடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலமாக இத்தொழிற்துறையில் ஈடுபட்டுவரும் நாம் பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகி வருகின்றோம். எமது உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நாம் பலதரப்பட்டோரிடம் முறைப்பாடுகள் செய்தபோதிலும் இற்றைவரையில் எவரேனும் உரிய பதில்களை தரவில்லை.

ஆனால் நாம் எதிர்கொண்டிருக்கும் இடையூறுகள், பிரச்சினைகள் உள்ளிட்ட உரிமைகள் தொடர்பாக நாடாளுமன்றில் குரல் கொடுத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொழிலாளர்கள் மற்றும் மக்கள் சார்பாக நாம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்திருக்கும் அதேவேளை, மக்கள் நலன்சார்ந்து உழைக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இவ்வாறான மக்கள் சேவைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென்றும் குறித்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: