எட்டு மாத குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய் யாழ்ப்பாணத்தில் கைது!

Tuesday, March 2nd, 2021

யாழ்ப்பாணம் – நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 மாத கைக் குழந்தையை பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவளைத்தளத்தில் வெளியாகி பார்ப்போரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று காலை சம்பவ இடம்பெற்ற வீட்டுக்கு சென்று குறித்த பெண்ணை கைது செய்தனர்.

அத்துடன் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுத்தப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளையை தாயார் எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதனாலேயே இதனை வெளிக்கொண்டு வருவதற்காக பெண்ணின் சகோதரனே காணொளிப் பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குவைத்தில் பணிபுரிந்து வந்த குறித்த தாய் தனது குழந்தையுடன் ஒரு மாதத்திற்கு முன்பு குவைத்திலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன், அவரின் கணவர் குவைத்தில் பணியாற்றுகிறார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அவரது கணவர் வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை கொடுக்காத காரணத்தினால் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: