எட்டு இலட்சம் பெறுமதியான இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் !
Monday, April 10th, 2017இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. ‘‘கெப்லா“ என அழைக்கப்படும் மின்சார காரினை கபில டி சில்வா என்ற என்பவர் தயாரித்துள்ளார்.
இந்த மோட்டார் வாகனம் 8 இலட்சம் ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மணிக்கு 60 மீற்றர் வேகத்தில் 4 பேர் இலகுவாக பயணிக்க கூடிய இந்த மோட்டார் வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்வதன் ஊடாக 100 மீற்றர் பயணிக்க முடியும்.
இந்த மோட்டார் பட்டரியை மீண்டும் வீட்டு மின்சாரங்கள் ஊடாக சார்ஜ் செய்யும் வசதிகள் காணப்படுகின்றது.
60 வீத உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் வாகனத்திற்கு, மோட்டார் கன்வர்டர் மற்றும் பட்டரி மாத்திரமே வெளிநாட்டில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்ட்ட இந்த பொருட்களுக்கு அரசாங்கத்தின் சலுகை வழங்கப்படுமாயின் 6 இலட்சம் ரூபாவுக்கு காரினை விற்பனை செய்ய முடியும்.
4 அடி அகலம் மற்றும் 7 அடி நீளத்திலான இந்த மோட்டார் வாகனம் முதல் முறையாக 2013ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு நெருக்கமான இந்த வாகனம் மிகவும் குறைந்த சத்தத்தையே வெளிப்படுத்துகின்ற நிலையில் ஒரு கிலோ மீற்றர் பயணிப்பதற்கு 3.50 ரூபாய் என் குறைந்த பணமே செலவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோட்டார் வாகனம் அடுத்த மாதமளவில் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை இலக்கு வைத்து புதிய வகை கார் அறிமுகம் செய்யவுள்ளதாக, அதன் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|