எச்சரிக்கை ! – வைரஸ் தாக்கத்தினால் மரணிக்கும் கால் நடைகள்!

Thursday, July 21st, 2016
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தில் ஒரு வகை நோய்க் கிருமியின் தாக்கம் காரணமாக கால் நடைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆடு மற்றும் மாடுகள் குறித்த நோய் தாக்கத்திற்குள்ளாகும் நிலையில் அதிகமாக மாடுகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெருகல் பிரதேச செயலகத்தின் தகவல்படி இதுவரையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு உண்ணாமை, நீர் அருந்தாமை, வாயில் நுரை வருதல் மற்றும் தாடை வீக்கம் போன்ற அறிகுறிகள் கால்நடைகளுக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர், குறித்த நோய் தாக்கத்திற்குள்ளான கால்நடைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கால நிலை மாற்றம், உணவு மற்றும் காற்றின் மூலம் இந்நோய் பரவக் கூடியது என்றும் கால் நடைகளை ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டு செல்லுதல் மூலமும் இது பரவும் என்றும் ஆண்டுதோரும் இந்நோய்க்குரிய தடுப்பு ஊசிகளை கால்நடைகளுக்கு ஏற்றுவதன் மூலம் நோயிலிருந்து கால் நடைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது..

Related posts: