எங்களுக்கும் அனுசரணை  வேண்டும் – ஆதிவாசிகளின் கிரிக்கட் அணி

Saturday, April 16th, 2016
ஆதிவாசிகளின் கிரிக்கட் அணிக்கும் இலங்கையின் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அனுசரணை வழங்கப்பட வேண்டுமென்று ஆதிவாசிகள் கிரிக்கட் சங்கத்தின் தலைவர், தம்பானை ஆதிவாசிகள் பாரம்பரிய மத்திய நிலையத்தின் தலைவர் ஊருவரிகே ஹீன்பண்டா எத்தோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையின் ஆதிவாசிகள் கிரிக்கட் அணி ஏனைய நாடுகளின் ஆதிவாசிகளுடன் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்புடனும், தயாராகவும் உள்ளது. இதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அனுசரணை தேவையாக உள்ளது.
ஆதிவாசிகள் கிரிக்கட் அணியின் தேவைகள் மற்றும் புதிய பிரேரணைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம்.அத்துடன் அமைச்சர்களைக் கொண்ட கிரிக்கட் அணியுடன் போட்டியொன்றில் ஈடுபடும் எமது ஆர்வத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: