ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டது கிங்தொட்டையில்!

Saturday, November 18th, 2017

காலி மாவட்டத்தின் கிங்தொட்டை உள்ளிட்ட சிலபகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்குசட்டம் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிங்தொட்டை பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து கருவாத்தோட்டம்(குருந்துவத்தை) மாஹப்புகல, வெலிப்பிட்டிமோதர, உக்வத்தை மற்றும் பியதிகம ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது. எனினும் அங்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: