ஊனமுற்ற இராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வளங்கமுடியும்: ஆனால் காலவரையறை கூற முடியாது!

Wednesday, July 27th, 2016

தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊனமுற்ற பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும், எனினும், அதற்கான காலவரையறையை குறிப்பிட முடியாது என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலத்தைக் கொண்டவர்களும் உள்ளதால், இந்த நடவடிக்கை சிக்கலானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும், இவர்களுக்கு மாத சம்பளம், ஊனமுற்ற இராணுவத்தினருக்கான கொடுப்பனவு கிடைப்பதாகவும், ஓய்வூதியத்தை வழங்குவதில் சிக்கல் உள்ளதாகவும் அதனை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தள்ளார்.

Related posts: