ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு!

Friday, June 19th, 2020

2020ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என இன்று  19.06.2020 அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச தகவல் பணிப்பாளர் நாலக களுவாவ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும், அவர் தெரிவிக்கையில் இதுவரையில் 4 ஆயிரத்து 337 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சுமார் 3 ஆயிரத்து 200 அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts:


கோப்பாயில் நீண்டகாலமாக கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது - 340 ...
நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு ...
நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தட...