ஊடகவியலளார்களை தாக்குவதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை!

Monday, December 19th, 2016

ஊடகத் தொழில் துறையை சிறப்பான முறையில் முன்னெடுப்பதில் தற்பொழுது சவால்கள் எதிர்நோக்கப்பட்டிருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வெகுஜன ஊடகப் பிரிவின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி பிரதிப் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலளார்களை தாக்குவதற்கு எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. ஊடகத்தின் தவறுகள் குறித்து அரச அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு அதிகாரிகள் செயற்படும்போது, சட்டம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் கலாநிதி பிரதீப் விரசிங்க சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை ஆகக்கூடிய வகையில் உறுதி செய்வதற்கு அர்ப்பணித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு ஊடகவியலாளர்கள் முயற்சிக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்கலந்து கொண்டபோதே முன்னாள் பீடாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நாட்டின் ஊடகத்தொழில் துறையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி, தகைமைகள் அல்லது நடைமுறை ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும். இதனால் ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் உரிமை வேண்டும். இதில் தடை அல்லது அச்சுறுத்தல் மேற்கொள்ளப்படுவது செய்திக்கான தடையாக அமையும் என்றும் அவர் கூறினார்.

c0dd4284d41c24140acd705579c738fa_XL

Related posts: