உள்ளூராட்சித் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் கோரிக்கை!

Wednesday, May 18th, 2016

தேர்தல் ஆணைக்குழுவிடம், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலை நடத்த முடியும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: