உள்ளக கணக்காய்வாளர் நியமனங்கள் வழங்கி வைப்பு!
Wednesday, August 16th, 2017வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர்களுக்கான நியமனங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வழங்கி வைத்துள்ளார்.
வடமாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவாகிய 13 பேருக்கான நியமனக் கடிதங்களையே ஆளுநர் தனது செயலகத்தில் வைத்துக் கையளித்தார்.
சம்பிரதாயபூர்வமாக நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஆளுநர் நேர்மையாக அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக செயலாற்ற நிர்ப்பந்திக்கும் அதேவேளை குறிப்பாக வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்
Related posts:
பஸ் சேவை நடத்த சாரதிகள் இல்லை!
யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை
500 தூண்களுடன் புங்குடுதீவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது கோயில் - எதிர்வரும் 25 ஆம் திகதி மகா கும்பாபி...
|
|