உல்லாச பயணிகளை கவர புதிய திட்டங்கள்!

Wednesday, November 9th, 2016

காணி அமைச்சு, உல்லாசப் பயண அமைச்சு, உல்லாசப் பயணக் கழகம், ஆகியன இணைந்து இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கை   வர்ணிக்கப்படும் திட்டத்தின் கீழ் மேலும் பல உல்லாசப் பயணிகளை கவர புதிய அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செயற்படவுள்ளன.  இயற்கை அழகிற்கு பிரசித்தமான குறைந்த பட்சம் ஐந்து தொடக்கம் எட்டு வரையிலான அரச நிலங்களை சர்வதேசரீதியிலான உல்லாசப் பயண குடும்பக் களியாட்டப் பிராந்தியங்களாக்கும் பணி தொடங்கவு ள்ளது.கடற்கரைகள்,மலைப் பிராந்தியங்கள்,காட்டுப் பிரதேசங்கள் போன்றன உள்ளடங்கலாக 1500 ஏக்கர்  பிராந்தியம் இதற்கு ஒதுக்கப்படவுள்ளது.

இந்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள ஹோட்டல், உல்லாசப் பயணத்துறை முதலீட்டு கருத்தரங்கில் இதற்கான முழுத் திட்டங்களும் வெளிப்படுத்தப்படவுள்ளன. இலங்கை உல்லாசப் பயணக் கழகத் தலைவரான டாக்டர் பிரபாத் யுக்வத்த இதுபற்றிக் குறிப்பிடுகையில் தாம் அமைச்சுடன் .இணைந்து செயற்படுவதாகவும், இத் திட்டங்கள் வெளிநாட்டவர் முதலீடு செய்ய வழி அமைத்துக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.கட்டடங்கள் நிர்மாணம், மின்சார இணைப்புகள், தெருக்கள் நிர்மாணம் போன்ற பணிகளைக் கழகம் மேற்கொண்டாலும், பிரதான முதலீடு வெளியார்களிடமிருந்தே பெறப்படும். இதுபற்றி உல்லாசப் பயணத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில், இலங்கை உல்லாசப் பயணத்துறையைப் பொறுத்த மட்டில் அது தனியார் கைகளிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கும், இவர்கள் நடவடிக்கைகளைக் கவனித்து, ஒருமுகப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதோடு ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அமைச்சின் பணியாகும்  என்று விளக்கியுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில் 5 மில்லியன் வரையிலான உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதோடு, வருமா னத்தை 10 பில்லியன் டொலர் தொகையாக உயர்த்துவதே தமது குறிக்கோள் என்றும் பிரஸ்தாபி த்துள்ளார். 450 ஏக்கர் விஸ்தீரணமான கடற்கரை நிலம் லங்கா பட்டுனா என்ற பெயரில், ஐந்து வருடத் திட்டத்துடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

unnamed (1)

Related posts: