உலக வானொலி தினம் இன்று அனுஷ்டிப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி, உலக வானொலி தினமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் தொடர்ச்சியாக ஆறாவது வருடமாக வானொலி தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஒரே நேரத்தில் தகவல்களை அதிகளவான மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடிய வெகுஜன ஊடகமாக வானொலி திகழ்கின்றது.
இலங்கையின் இலத்திரனியல் தொடர்பாடல் துறைசார் வரலாற்றில் மிகப் புராதன ஊடகமாக காணப்படுவது வானொலி ஊடகமே ஆகும்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோட்டம்!
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சுமார் 51 கிலோ கஞ்சா மீட்பு!
கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வகை 1சீ யாக உயர்வு!
|
|